பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கும் ஆரோக்கிய ராஜீவுக்கும் தி.மு.க. சார்பில் நிதியுதவி - கழகத் தலைவர் அறிவிப்பு
பதிவு: 29 Apr 2019, 10:41:31 மணி
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்து அவர்களுக்கும், அதே போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதகம் வென்று சாதனை புரிந்திருக்கும் திரு ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டுத்துறையில் இந்த இருவரும் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் கோமதி மாரிமுத்து அவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியும், திரு ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கான இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.