கஜா புயல் நிவாரண நிதியாக, தி.மு.க சார்பில் ரூ.1 கோடி
பதிவு: 21 Nov 2018, 00:24:42 மணி
"கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 5௦க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து , விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.
இந்த வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க தேவையான நிவாரணம், மறுசீரமைப்புமற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு கோடி ரூபாயும், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்" என கழக தலைவர் மு.க. ஸ்டாலின்அவர்கள் அறிவித்தார்.