இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருடன் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பதிவு: 21 Nov 2018, 00:22:28 மணி
இன்று (20-11-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி.மு.கழக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி எம்.பி ஆகியோர் உடன் இருந்தனர்.