கழக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் - தலைமைக் கழக அறிவிப்பு
பதிவு: 04 Jul 2019, 18:13:59 மணி
கழக இளைஞரணிச் செயலாளராக பணியாற்றி வரும் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞர் அணிச் செயலாளராக திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.அன்பழகன் அவர்களால் நியமிக்கப்படுகிறார்.
கழக இளைஞரணி செயலாளராக திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்று கழக நிர்வாகிகள் - தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடினர்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையை தட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.