கழக தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்..
பதிவு: 28 Nov 2018, 19:32:51 மணி
தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 அன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் "அனைத்துக் கட்சிக் கூட்டம்" நடைபெறும்.
தலைமைக் கழகம்,
திமுக.