மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனதை வெல்வோம்' இதுவே எங்கள் முழக்கம் – கழக தலைவர்
பதிவு: 25 Dec 2018, 15:36:42 மணி
இன்று (24-12-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் " திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டத்தைக் கூட்டி அந்தக்கூட்டம் தேர்தலுக்கு பயன்படும் வகையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு முடிவெடுத்து வருகின்ற ஜனவரி 3-ம் தேதியிலிருந்து, அந்தப் பயணத்தை கழகத்தின் சார்பில் நாங்கள் நடத்தவிருக்கின்றோம்.
அந்தப் பயணத்தை நடத்துவதற்கு நாங்கள் ஒரு முழக்கத்தை தேர்வு செய்திருக்கின்றோம். "மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம்” இதுவே எங்கள் முழக்கம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து 12,617 ஊராட்சிகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்களை, நிர்வாகிகளை, ஊராட்சியில் இருக்கக்கூடிய பொதுமக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவு செய்திருக்கின்றோம்" என்று கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்.