இனி நமது முழக்கம் – நாடும் நமதே! நாற்பதும் நமதே - கழகத் தலைவர்
பதிவு: 28 Dec 2018, 01:59:07 மணி
இன்று (27-12-2018) கரூர் மாவட்டம் திருமாநிலையூர் - இராயனூர் ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தலைமையில் 30 ஆயிரத்து 425 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி கழகத் தலைவர் அவர்களின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் இணைப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய எழுச்சி உரையில்
"எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு முழு வெற்றியை பெறப்போகிறது. அதற்கடுத்த மறுநாளே எடப்பாடி ஆட்சி கவிழும். இதை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம்.
அதற்கான ஜனநாயக போருக்கு கைகோர்க்க உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன். இந்த ஜனநாயக போர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பும் போராக அமையவிருக்கிறது. எனவே, நான் நிறைவாக சொல்லுகிறேன். ஒரு முழக்கத்தை முழங்கப் போகிறேன். அது ஒன்று தான். நம்முடைய முழக்கமாக இருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்." என்று கழகத் தலைவர் அவர்கள் முழக்கமிட்டார்