New - DetailPage - DMK
header_right
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களும் இன்று (9-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு

பதிவு: 10 Mar 2021, 10:07:55 மணி

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களும் இன்று (9-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழகத்தில்   3 (மூன்று) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன்-கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.