திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியச் செயலாளர் திரு. ஜி.தேவராஜன் அவர்களும், இன்று (10-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு
பதிவு: 10 Mar 2021, 13:49:11 மணி
நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியச் செயலாளர் திரு. ஜி.தேவராஜன் அவர்களும், இன்று (10-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியக்குழு துணைத் தலைவர் பி.வி.கதிரவன், மத்திய ஐவர் குழு உறுப்பினர் சி.முத்துராமலிங்கம், மத்தியக்குழு உறுப்பினர் எம்.கர்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கர் பாண்டியன் - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.