New - DetailPage - DMK
header_right
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு

பதிவு: 11 Mar 2021, 10:50:51 மணி

நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்,  தி.மு.க. தோழமைக் கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - அகில இந்திய பார்வர்டு பிளாக் - ஆதித்தமிழர் பேரவை - மக்கள் விடுதலை கட்சி ஆகியவை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (10.3.2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு.கழகமும்,  மேற்குறிப்பிட்ட தோழமைக் கட்சிகளும் கலந்து பேசி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவதென தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டு கழகத் தலைவர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.