திராவிட முன்னேற்றக் கழகமும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (11.3.2021) தொகுதி உடன்பாடுகள்
பதிவு: 12 Mar 2021, 10:26:04 மணி
கழகத் தலைவர் அவர்களும் -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களும்
செய்து கொண்ட தொகுதி உடன்படிக்கை
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (11.3.2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு.கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த சட்டமன்றத் தேர்தலில் பின்வரும் ஆறு தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
தொகுதிகளின் விவரம்
1. 195. திருப்பரங்குன்றம்
2. 178. கந்தர்வக்கோட்டை (தனி)
3. 132. திண்டுக்கல்
4. 218. கோவில்பட்டி
5. 61. அரூர் (தனி)
6. 164. கீழ்வேளூர் (தனி)
இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சௌந்தரராஜன், பி.சம்பத் - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.