த.மா.கா. மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம் அவர்கள், சேலத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பதிவு: 25 Mar 2021, 10:32:21 மணி
இன்று (23-03-2021), த.மா.கா. மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம் அவர்கள், சேலத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் த.மா.கா. மாநிலப் பொதுச் செயலாளர் ஞானசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன், மாநிலச் செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை யூனியன், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ராஜேந்திரன், அ.ம.மு.க. மாநில சிறுபான்மைப் பிரிவு இணைச்செயலாளர் மருத்துவர் தாரா ஷபி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.