திரைப்பட இயக்குநர் திரு வ.கௌதமன் அவர்களின் தந்தை மறைவுக்கு கழக தலைவர் இரங்கல்
பதிவு: 21 Nov 2018, 12:46:12 மணி
திரைப்பட இயக்குநர் திரு வ.கௌதமன் அவர்களின் தந்தை திரு வடமலை அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைவு எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தந்தையை இழந்து வாடும் திரு கெளதமனுக்கும் அவரது உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அறவே நீக்கிடும் வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கடுமையாகவும், உறுதியாகவும் போராடிய அவரின் மறைவு சமத்துவ போராளிகளுக்கு பேரிழப்பாகும்.