திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
பதிவு: 05 May 2021, 11:55:12 மணி
“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பத்திரிகைச் செய்தி”
இன்று (05-05-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதுபோது, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.