New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

பதிவு: 09 May 2021, 12:11:02 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியின் விவரம் வருமாறு:
'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!
எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!