தலைமைக் கழக அறிவிப்பு - சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு. பிச்சாண்டி ஆகியோர் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுவர்.
பதிவு: 11 May 2021, 10:15:35 மணி
சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு,
துணைத் தலைவராக கு. பிச்சாண்டி ஆகியோர்
தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுவர்.
தலைமைக் கழக அறிவிப்பு
வருகிற 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களும் - துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுகின்றனர்.
“அண்ணா அறிவாலயம்” தலைமைக் கழகம்,
சென்னை-18. தி.மு.க.