New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

பதிவு: 24 May 2021, 10:45:18 மணி

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பத்திரிகைச் செய்தி"
இன்று (23.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:
வார்டு 67 -  ஜி.கே.எம். காலனி முத்துமாரியம்மன் கோவில் அருகில் 40,000 பேருக்கும், வார்டு 65 - குருகுலம் பள்ளியில் 40,000 பேருக்கும், வார்டு64 - எவர்வின் பள்ளியில் 40,000 பேருக்கும், வார்டு 68 - கோபாலபுரம் பள்ளி, மண்டலம் - 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 1785 பேருக்கும், அரிசி உள்ளிட்ட12 வகையான உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கும் பணியினைத் துவக்கி வைத்தார்.
அதோடு, வார்டு 66-இல் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் 2021-ல் கொளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற அயராது உழைத்த கழக நிர்வாகிகள் 36 பேருக்குச் சிறப்பு செய்தார்.