மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட அவைத்தலைவரும் - சட்டமன்றக்குழு முன்னாள் தலைவருமான பி.ஆர்.சுந்தரம், Ex.M.P., & Ex.M.L.A., தி.மு.க.வில் இணைந்தார்.
பதிவு: 12 Jul 2021, 10:57:57 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
நாமக்கல் மாவட்ட அவைத்தலைவரும் - சட்டமன்றக்குழு முன்னாள் தலைவருமான
நாமக்கல் பி.ஆர்.சுந்தரம், Ex.M.P., & Ex.M.L.A.,
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (11.7.2021), காலை, நாமக்கல் கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட அவைத்தலைவரும் - சட்டமன்றக்குழு முன்னாள் தலைவருமான நாமக்கல் பி.ஆர்.சுந்தரம், Ex.M.P., & Ex.M.L.A., தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., - துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
***