New - DetailPage - DMK
header_right
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலாளர் திரு.எஸ்.இ. வெங்கடாஜலம் Ex.MLA அவர்கள் தலைமையில், 30க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 22 Jul 2021, 10:31:21 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
அ.ம.மு.க. கட்சியின்
சேலம் மத்திய மாவட்ட செயலாளர்
எஸ்இ. வெங்கடாஜலம்,  Ex.M.L.A., தலைமையில்
30க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் அணி மாவட்ட நிர்வாகிகள்  தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.7.2021), காலை, சேலம் மத்திய மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்இ. வெங்கடாஜலம் தலைமையில், சேலம் மத்திய மாவட்ட அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த சூரமங்கலம் தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.சுப்பிரமணியன், கொண்டலாம்பட்டி மேற்கு பகுதிச் செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, அம்மாபேட்டை கிழக்கு பகுதி செயலாளர் ஆர்.கே.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் வி.மாரீஸ் (எ) மாரியம்மாள்,
 
 
சேலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.எல்.பி.முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெ.ராஜ்குமார், மாவட்ட மாணவர் அணி தலைவர் ஹரிஹரன், மாணவர் அணி இணைச் செயலாளர்கள் ஜி.பிரவன்ராம், பி.பாலாரமேஷ், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் எஸ்.லோகநாதன், ஓமலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கணேசன், ஓமலூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், தகவல்தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த  மாவட்ட தலைவர் ஆர்.சூரியபிரகாஷ், மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் வி.தினேஷ், பாலாஜி மாவட்ட துணைச் செயலாளர் டி.ஏ.லட்சுமிகாந்த், 55வது வட்டச் செயலாளர் டி.விஜயகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நிஜாம், துணைச் செயலாளர் பி.சுதாகர் (எ) செல்வராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்.சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.சாந்தாராம், 46வது வட்டச் செயலாளர் எம்.வபி.சரவணன், 51வது வட்டச் செயலாளர் என்.கார்த்திகேயன், கொண்டலாம்பட்டி மேற்கு பகுதி துணைச் செயலாளர் எம்.வடிவேல், 49வது வட்ட கோட்ட செயலாளர் எம்.கவிதாஸ், 54வது வட்ட கோட்ட துணைச் செயலாளர் எஸ்.குமார், கொண்டலாம்பட்டி கிழக்கு பகுதி இளைஞர் அணியைச் சேர்ந்த இணைச் செயலாளர் ஏ.செந்தில்குமார், துணைச் செயலாளர் பி.மணிகண்டன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு மாவட்ட முன்னாள் செயலாளர் அருள்புஷ்பராஜ், எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் ஜி.குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.