New - DetailPage - DMK
header_right
'கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இராமநாதபுரம் மாவட்ட அமமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திரு.வ.து.நடராஜன் & இராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலாளர் திரு. வ.து.ந.ஆனந்த் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்'

பதிவு: 22 Jul 2021, 10:32:32 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
இராமநாதபுரம் மாவட்டம்
அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த
முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மற்றும்
இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில்
ஒன்றிய , நகர, பேரூர் செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.7.2021) காலை, இராமநாதபுரம் மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் ஆகியோர் தலைமையில்,  இராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த   போகலூர் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகநாதன், இராமநாதபுரம் ஒன்றியச் செயலாளர் கே.பி.முத்திஸ்வரன், மண்டபம் ஒன்றியச் செயலாளர் நகாச்சி கணேசன், ஆர்.எஸ்.மங்களம் ஒன்றியச் செயலாளர் ஜி.முருகபூபதி, திருவாடானை ஒன்றியச் செயலாளர் சுப.ரெத்தினமூர்த்தி, நயினார்கோவில் ஒன்றியச் செயலாளர் சி.சிவகுமார், போகலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜாராம்பாண்டியன், பரமக்குடி ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், கடலாடி ஒன்றியச் செயலாளர் ஆர்.பத்மநாபன்,
 
சாயல்குடி ஒன்றியச் செயலாளர் ஏ.பச்சைக்கண்ணு, திருப்புல்லாணி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.முருகேசன், திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி, இராமநாதபுரம் நகரச் செயலாளர் ஏ.ரஞ்சித்குமார், பரமக்குடி நகரச் செயலாளர் டி.கலைவாணன், தொண்டி பேரூர் செயலாளர் இனாமல் ஹாசன், ஆர்.எஸ்.மங்களம் பேரூர் செயலாளர் ஆர்.சசிக்குமார், மண்டபம் பேரூர் செயலாளர் களஞ்சியராஜா, முதுகுளத்தூர் பேரூர்ச் செயலாளர் சுந்தரமூர்த்தி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கொளுந்துரை எஸ்.சரண்யாசெல்வராஜ், திருவரங்கம் சாத்தையா, கருமல் சகிலாமுருகன் மற்றும் கொளுந்துரை கே.ராமமூர்த்தி, எம்.முருகேசன், கிளைச் செயலாளர் நெடியமாணிக்கம் கே.இளங்கோவன், ஜி.சங்கர், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் கொளுந்துரை கே.ராஜேந்திரன், திருவரங்கம் கோபால், டி.கார்த்தி, எம்.மோகன் , மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் எம்.வரதராஜன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.உதயசூரியன், பத்து ஊராட்சிமன்ற தலைவர்கள், நான்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் 10 பேர்  உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.