மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி, மத்தியசென்னை, கரூர் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்.
பதிவு: 27 Jul 2021, 12:26:09 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் - மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஏ.வி.கே.ராஜா -
கரூர் மாவட்டச் செயலாளர் பகவான் பிடி.பரமேஸ்வர் ஆகியோர் தலைமையில்
கரூர் மாவட்டச் செயலாளர் பகவான் பிடி.பரமேஸ்வர் ஆகியோர் தலைமையில்
பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (26.7.2021) மாலை, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் - மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஏ.வி.கே.ராஜா - கரூர் மாவட்டச் செயலாளர் பகவான் பிடி.பரமேஸ்வர் ஆகியோர் தலைமையில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் சிவ அரசு, மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் உதயகுமார், மத்திய சென்னை மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் அப்துல் லாசா, அண்ணாநகர் பகுதிச் செயலாளர் ஆர்.டில்லி, மகளிர் அணி நிர்வாகிகளான காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ரோபர்ட், திருவண்ணாமலை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா, கோவை மகளிர் அணி மாவட்டச் செயலாளர் கீதா கலைவாணி, விழுப்புரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் யமுனா, மத்திய சென்னை மாவட்மட மகளிர் அணிச் செயலாளர் மீனா சீனிவாசன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மாநில சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
***