New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, தனி அதிகாரியை நியமனம் செய்தமைக்காக,கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பதிவு: 28 Jul 2021, 10:13:30 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள்
தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு,
தனி அதிகாரியை நியமனம் செய்தமைக்காக,
 
 
பசும்பொன் கல்லூரி மீட்பு இயக்கம், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள், தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, தனி அதிகாரியை நியமனம் செய்தமைக்காக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (27.7.2021) மாலை, நேரில் சந்தித்த “பசும்பொன் கல்லூரி மீட்பு இயக்க”த்தைச் சேர்ந்த பேராசிரியர் பி.சமரசம் அவர்கள் தலைமையில் பசும் பொன் கல்லூரி மீட்பு இயக்கம்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பொன்ராஜ், பெரியதுரை, பசுபதிபாண்டியன், பாலசுப்பிரமணியன், சின்னமருது, இராயபாண்டி, முருகன், தி.மு.இராஜேந்திரன், கவுதன், விஜயகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து   நன்றி தெரிவித்தனர்.
 
அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தென்காசி மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதன்சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாதலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***