மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் நெல்லை மாநகர முன்னாள் மேயர் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 07 Aug 2021, 10:47:23 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருநெல்வேலி மத்திய மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்
திருமதி வசந்தி முருகேசன், Ex.M.P., மற்றும்
திருமதி வசந்தி முருகேசன், Ex.M.P., மற்றும்
நெல்லை மாநகர முன்னாள் மேயர் திருமதி புவனேஸ்வரி -
முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் - நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவருமான பல்லிக்கோட்டை செல்லத்துரை ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (6.8.2021) மாலை, திருநெல்வேலி மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் திருமதி வசந்தி முருகேசன், Ex.M.P., மற்றும் நெல்லை மாநகர முன்னாள் மேயர் திருமதி புவனேஸ்வரி - முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவருமான பல்லிக்கோட்டை செல்லத்துரை ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல் வஹாப், எம்.எல்.ஏ, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், திருநெல்வேலி மாநகரச் செயலாளர் ஏஎல்எஸ்.லெட்சுமணன், ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், பகுதிச் செயலாளர் ரவீந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
***