மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பெ.சின்னையா மற்றும் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 07 Aug 2021, 10:49:22 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
புதுக்கோட்டை மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
புதுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பெ.சின்னையா -
ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா கருப்பையா -
திருமயம் ஒன்றிய கவுன்சிலர் திருமதி லட்சுமி ஆகியோர்
ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா கருப்பையா -
திருமயம் ஒன்றிய கவுன்சிலர் திருமதி லட்சுமி ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (6.8.2021) மாலை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பெ.சின்னையா - புதுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா கருப்பையா மற்றும் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் ஒன்றிய கவுன்சிலர் திருமதி லட்சுமி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு எஸ்.இரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், செய்தி தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார் மற்றும் தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***