மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தேசிய அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்று, நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச கபடி போட்டியில் கலந்து கொள்ள செல்லும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பதிவு: 21 Aug 2021, 10:54:26 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை
தேசிய அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்று,
நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச கபடி போட்டியில் கலந்து கொள்ள செல்லும்
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள்
சிலம்பரசன், சதீஸ், சுரேஸ்குமார், கணேஷ்பாபு, மணிகண்டன் ஆகியோர்
நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (19.8.2021) மாலை, தேசிய அளவில் கபடி விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச கபடி போட்டியில் கலந்து கொள்ள செல்லும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் சிலம்பரசன், சதீஸ், சுரேஸ்குமார், கணேஷ்பாபு, மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதுபோது துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***