மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற பத்தொன்பது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பதிவு: 21 Aug 2021, 10:55:59 மணி
இன்று (20-08-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற பத்தொன்பது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர், எதிர்க்கட்சியினரின் கூட்டறிக்கையை வழிமொழிந்து, அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவின் விவரம் வருமாறு:
Federalism is being destroyed due to the scant respect BJP has for states' rights and it is imperative that the opposition stands united at this hour. The recent Parliament session has witnessed our unity. It must grow stronger & DMK supports the joint statement in toto.
தமிழாக்கம்:
மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க. அரசால் கூட்டாட்சிக்கொள்கை அழிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம். அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நமது ஒற்றுமையைக் கண்டது. இது இன்னும் வலிவுடையதாக வளரவேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையினைத் தி.மு.கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.