New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இராணிப்பேட்டை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வர்த்தக அணி செயலாளர் எ.வி. சாரதி தலைமையில் மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 23 Aug 2021, 13:24:54 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
இராணிப்பேட்டை  மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
இராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர்
எ.வி. சாரதி தலைமையில்
அ.தி.மு.க. - பா.ம.க.- தமிழக வாழ்வுரிமை கட்சி - நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின்
மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.8.2021) மாலை, இராணிப்பேட்டை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த இராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எ.வி, சாரதி தலைமையில் ஆற்காடு நகர மாவட்டபிரதிநிதி என். கண்ணன், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் சி. தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் எம். கமலஹாசன், 6வது வார்டு பிரதிநிதி எ.டி.எஸ். சுரேஷ், முன்னாள் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் எ.டி.எஸ். ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர் டி. ராஜ்குமார், 6வது வட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம். தங்கராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே.கே. சண்முகம், 16வது வார்டு இளைஞர் அணி செயலாளர் என். ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் டி. உமாபதி, கே. கார்த்திகேயன், ஜெ. ஜெயராஜ், எம். மணிவண்ணன், சி. நடராஜன், எம். மதன்ராஜ், எம். ஹரி, எஸ். பாலமுருகன், டி.எஸ். சிவா, எஸ். ராஜேஷ், ஆர். ஜெகன், கே. முரளிதரன் நாம் தமிழர் கட்சி முன்னாள் நகர செயலாளர் ஜெ. துரைமுருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி திமிரி ஒன்றிய செயலாளர் டி. பாபு  மற்றும் 20க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
அதுபோது கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,  துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மாண்புமிகு எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை,  வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு இராணிப்பேட்டை ஆர். காந்தி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன்  ஆகியோர் உடனிருந்தனர்.
***