New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் நாகை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த  ஊராட்சி மன்றத் தலைவர்கள் - அதிமுக நிர்வாகிகள்  தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 31 Aug 2021, 10:42:28 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
நாகை வடக்கு மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள்
கஞ்சாநகரம் சுப்பிரமணியம், மடப்புரம் கண்ணன் 
மற்றும்
நீடூர், நலத்துக்குடி, ரூரல், தாலச்சேரி, மேலாநல்லூர், கீழமருதநல்லூர், மேலையூர், பாகசாலை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் - அதிமுக நிர்வாகிகள் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (30.8.2021) மாலை, நாகை வடக்கு மாவட்டம், .தி.மு..வைச் சேர்ந்த செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கஞ்சாநகரம் சுப்பிரமணியன், மடப்புரம் கண்ணன் - ஊராட்சிமன்றத் தலைவர்களான மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த நீடூர் அருள்ராஜ், நலத்துக்குடி பாரதிராஜா, ரூரல் தமிழரசன், தாலச்சேரி ராஜ்குமார், மேலாநல்லூர் பாரதிதாசன், கீழமருதநல்லூர் சேகர், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மேலையூர் திருமதி நளினி ராதாகிருஷ்ணன், பாகசாலை திருமதி கோமதி மதியழகன்  மற்றும் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதக்கத்துல்லர், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கொத்தங்குடி சேகர், உத்திரங்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் உதயசங்கர், ஒன்றிய சிறுபான்மை அணிச்  செயலாளர் முகமது அன்சாரி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கிடாரம்கொண்டான் ஞானசேகரன், திருவிளையாட்டம் ஊராட்சி செயலாளர் கண்ணன் ஆகியோர்  தி.மு..வில் இணைந்தனர்.
 
அதுபோது பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மாண்புமிகு எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், எம்.எல்.ஏ.,  மற்றும் தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன்,   ஆகியோர் உடனிருந்தனர்.
***