New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் தென்காசி மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.குமார்பாண்டியன், எஸ்.முத்துச்செல்வி, Ex.M.L.­A., சாந்தசீலன், சண்முகவேல் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 31 Aug 2021, 10:43:46 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
தென்காசி தெற்கு மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
நெல்லை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கே.பி.குமார்பாண்டியன்,
மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் எஸ்.முத்துச்செல்வி, Ex.M.L.­A.,
தென்காசி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் சாந்தசீலன்,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சண்முகவேல் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (30.8.2021) மாலை, தென்காசி தெற்கு மாவட்டம், .தி.மு..வைச் சேர்ந்த நெல்லை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கே.பி.குமார்பாண்டியன் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் எஸ்.முத்துச்செல்விEx.M.L.A., தென்காசி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் சாந்தசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சண்முகவேலு ஆகியோர்  தி.மு..வில் இணைந்தனர்.
 
அதுபோது பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மாண்புமிகு எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன்,   ஆகியோர் உடனிருந்தனர்.
***