முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாளில் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பதிவு: 06 Sep 2021, 10:08:13 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வழக்கறிஞர், ஆற்றல்மிகு பேச்சாளர், தமிழறிஞர், தொழிற்சங்க முன்னோடி என வ.உ.சிதம்பரனாரின் சிறப்புகள் நீளமானவை. கப்பலோட்டிய அவர் தீரமும்; செக்கிழுத்த அவர் தியாகமும் விடுதலை வரலாற்றின் மெய்சிலிர்க்க வைக்கும் பக்கங்கள். அப்பெருமகனாரின் 150-ஆவது பிறந்தநாளில் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.