கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பரிசுகளை வழங்கினார்
பதிவு: 08 Sep 2021, 11:12:39 மணி
கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பரிசுகளை வழங்கினார்
தமிழ் வாழ, தமிழர் இனம் வாழ, தானே தமிழாய் வாழ்ந்த, தமிழர்க்குத் தாயாய்த் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவுநாளில் Kalaignar Memorial International Virtual Marathon (2nd year) ‘(கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் - இணையவழி - 2ஆம் ஆண்டு) மாரத்தான் முதல் பதிவை தி.மு.க. கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ., அவர்கள் கடந்த 7-8-2021 அன்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தொடங்கி வைத்தார்.
ஆக.7 முதல் ஆக.31 வரை நடைபெற்ற இம்மாரத்தான் போட்டியில் 37 உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் 34 மாவட்டங்களிலிருந்தும் 19,596 பேர் பங்கேற்றுள்ளனர்.
21 கி.மீ. பிரிவில் புனேவைச் சேர்ந்த திரு. பாபு பரந்தாமன், கோவையைச் சேர்ந்த திரு. வேலாயுதம், சென்னையைச் சேர்ந்த திரு. மூர்த்தி, கோவையைச் சேர்ந்த திரு. மாரிமுத்து ஆகியோருக்கு முறையே முதல் நான்கு பரிசுகளும்; 10 கி.மீ. பிரிவில் ஓசூரைச் சேர்ந்த ரோகித், ராமாபுரத்தைச் சேர்ந்த அக்ஷயா, திருவாரூரைச் சேர்ந்த அருண்சுரேஷ் ஆகியோருக்கு முறையே முதல் மூன்று பரிசுகளும்; 5 கி.மீ. பிரிவில் ரூபேஷ்வர், கண்ணன், கிரிராவ் ஆகியோருக்கு முறையே முதல் மூன்று பரிசுகளும் வழங்கப்பட்டன.
19,596 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டியில் பதிவுக் கட்டணமாகத் தலா ரூ.300 பெறப்பட்டதில், சேவை வரி நீங்கலாக கிடைத்திருக்கிற 56,02,693/- ரூபாயினை இன்று (7-9-2021) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இணைய வழியாக நடத்தப்பட்ட மெய்நிகர் மாரத்தான் போட்டிகளில் அதிக அளவிலான பங்கேற்பாளர்கள் ‘கலைஞர் மெய்நிகர் மாரத்தான்’ போட்டியில் பங்கேற்றதினால் ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-இல் இடம்பிடித்து ஆசிய சாதனை மற்றும் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு, மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆர்.எஸ். பாரதி, திரு. டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். அரவிந்த்ரமேஷ், திரு. காரம்பாக்கம் கணபதி, திரு. ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, தலைமைக் கழக நிர்வாகிகள் திரு. அன்பகம் கலை, திரு. ஆர். கிரிராஜன், திரு. பூச்சி முருகன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் எஸ். குணசேகரன், பாலவாக்கம் த. விஸ்வநாதன், வாசுகிபாண்டியன், வேளச்சேரி எஸ். பாஸ்கரன், பகுதிச் செயலாளர்கள் எம். கிருஷ்ணமூர்த்தி, இரா. துரைராஜ், கே. கண்ணன், மு. ராசா, துரை. கபிலன், சு. சேகர், பெருங்குடி எஸ். ரவிச்சந்திரன், நொளம்பூர் வே. ராஜன், வி.இ. மதியழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை சம்பத், சைதை மா. அன்பரசன், வழக்கறிஞர் எம். ஸ்ரீதரன், எம்.கே. ஏழுமலை, இளைஞர் அணி நிர்வாகிகள் வே. ஆனந்தம், ஏ.கே. ஆனந்த், எம். விநாயகமூர்த்தி, அணியின் அமைப்பாளர்கள் சைதை சாதிக், நாடிமுத்து மணிகண்டன், எஸ்.ஏ. அரிகிருஷ்ணன், பா. அருண்குமார், ரத்னா லோகேஷ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
***