New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “The Rising Sun” Magazine இதழை வெளியிட்டார்.

பதிவு: 27 Sep 2021, 10:58:16 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் 
மு.க.ஸ்டாலின் அவர்கள்
“The Rising Sun” Magazine இதழை வெளியிட்டார்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (26-9-2021), மாலை 7.00 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்;
 
  திக்கெட்டும் பரவிடும் திராவிட இயக்கக் கொள்கை, இந்தியாவுக்கே வழிகாட்டி தி.மு.க.வின் செய்தி, அகிலத்துக்குச் சொல்ல ஆங்கிலத்தில் உலகம் முழுவதும் ஒளி பாய்ச்ச இருக்கும், மாதம் இரு முறை வெளிவரும் “The Rising Sun” Magazine இதழின் முதல் பிரதியினை, இவ்விதழின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளரும் - கழக இளைஞர் அணிச் செயலாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ., அவர்கள் முன்னிலையில் வெளியிட;
 
கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் பத்திரிகை ஆசிரியர் பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 
அத்துடன் The Rising Sun Magazine இதழுக்கான www.therisingsunmagazine.com பிரத்யேக இணைய தளத்தினை கழகத் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
 
இதனைத் தொடர்ந்து, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் - வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான், மாநில இலக்கிய அணி பொருளார் டாக்டர் நா.சந்திரபாபு, சென்னை வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மதிவாணன், ஆயிரம்விளக்கு கிழக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அன்புதுரை ஆகியோர் இவ்விதழுக்கான ஆயுள் சந்தாவினை கழகத் தலைவர் அவர்களிடம் அளித்து, முதல் பிரதியினை பெற்றுக் கொண்டனர்.
***