கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செய்திக்குறிப்பு
பதிவு: 06 Jan 2019, 12:20:56 மணி
விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சிந்தாதிரிபேட்டையில் உள்ள மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள விவசாயிகளை, இன்று (04-01-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.