கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால், மாநில மாணவர் அணிச்செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
பதிவு: 16 Oct 2021, 10:39:25 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருச்சி தெற்கு மாவட்டம்,
தே.மு.தி.க.வைச் சேர்ந்த
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால் -
மாநில மாணவர் அணிச் செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார் தலைமையில்
தே.மு.தி.க.வைச் சேர்ந்த
மருங்காபுரி ஒன்றிய கவுன்சிலர் - ஒன்றியச் செயலாளர் வி.சரவணன் (எ) பொன்னையா - ஊராட்சி மன்றத் தலைவர் - பொதுக்குழு உறுப்பினர் சி.சந்திரலிங்கம் - மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் எம். நூர்முகமது - பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம்.அருண்பிரசாத் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் ஜி.மோகன், பி.பரமசிவம் - மணப்பாறை நகர வழக்கறிஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஜெயகாளிமுத்து - கலிங்கப்பட்டி எஸ்.சத்தியசிவசக்திவேல் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (15.10.2021) காலை, திருச்சி தெற்கு மாவட்டம், தே.மு.தி.க.வைச் சேர்ந்த திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால் - மாநில மாணவர் அணிச் செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த மருங்காபுரி ஒன்றிய கவுன்சிலர் - ஒன்றியச் செயலாளர் வி.சரவணன் (எ) பொன்னையா - ஊராட்சி மன்றத் தலைவர் - பொதுக்குழு உறுப்பினர் சி.சந்திரலிங்கம் - மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் எம். நூர்முகமது - பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம்.அருண்பிரசாத் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் ஜி.மோகன், பி.பரமசிவம் - மணப்பாறை நகர வழக்கறிஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஜெயகாளிமுத்து - மணப்பாறை கலிங்கப்பட்டி 3வது வார்டு எஸ்.சத்தியசிவசக்திவேல் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகத் துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கேஆர். பெரியகருப்பன், திருச்சி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
***