New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சிவகங்கை மாவட்ட பாஜகவின் முதல் உறுப்பினரும், முதல் மாவட்ட தலைவருமான ஆடிட்டர் பி. இளையபெருமாள் தலைமையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 18 Oct 2021, 10:25:12 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
சிவகங்கை மாவட்டம்,
பா.ஜ.க.வைச் சேர்ந்த
மாவட்ட முதல் உறுப்பினரும் - முதல் மாவட்ட தலைவருமான  ஆடிட்டர் பி.இளையபெருமாள் தலைமையில்
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (16.10.2021) மாலை,  சிவகங்கை மாவட்டம்,  பா.ஜ.க. வைச் சேர்ந்த மாவட்ட முதல் உறுப்பினரும் - முதல் மாவட்ட தலைவருமான ஆடிட்டர் பி.இளையபெருமாள் தலைமையில் பா.ஜ.க. மாவட்ட முன்னாள் தலைவர் ஸ்தபதி செல்வராஜ் - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் துணைத் தலைவரும் - இந்திய மருத்துவ சங்க அகில இந்திய மக்கள் கமிட்டி தலைவருமான டாக்டர் ஆர்விஎஸ்.சுரேந்திரன் சிவகங்கை ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மஞ்சுளா பாலச்சந்தர் - அ.ம.மு.க.வைச் சேர்ந்த சிவகங்கை ஒன்றியச் செயலாளரும் - கண்டாங்கிபட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான பி.மந்தக்காளை - சிவகங்கை ஒன்றியக்குழு உறுப்பினர்களான  அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருமதி லெட்சுமி சரவணன், வேல்முருகன், தே.மு.தி.க.வைச் சேர்ந்த ரமேஷ் (ஒன்றியச் செயலாளர்) - அ.ம.மு.க.வை சேர்ந்த திருமதி பத்மாவதி பிரபாகரன் ஆகியோர் தி.மு..வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    
அதுபோது  கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி.,  சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கேஆர். பெரியகருப்பன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாநில இலக்கிய அணி தலைவர் மு.தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர் த. சேங்கைமாறன், ஒன்றியச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஆரோக்கியசாமி, கிருஷ்ணமூர்த்தி, கென்னடி, காரைக்குடி நகரச் செயலாளர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பி.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
 ***