மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ’தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ தொகுத்த, “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்” எனும் நூலினை வெளியிட, முதல் பிரதியினை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பதிவு: 26 Oct 2021, 10:44:20 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள்
கழகத் தலைவர் அவர்கள்
’தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ தொகுத்த,
“பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்”
(அனைத்து சாதியினரும் அர்ச்சகரான வரலாறு) எனும் நூலினை வெளியிட,
முதல் பிரதியினை
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் முன்னிலையில்
கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள்
பெற்றுக் கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (23.10.2021) மாலை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொகுத்த “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்” (அனைத்து சாதியினரும் அர்ச்சகரான வரலாறு) எனும் நூலினை வெளியிட, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் முன்னிலையில் முதல் பிரதியினை கழகப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மாண்புமிகு எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., கைத்தறித் துறை அமைச்சர் மாண்புமிகு இராணிப்பேட்டை ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவர் வழக்கறிஞர் துரைசாமி, மாவட்ட நிர்வாகிகள் திங்கள் குமரன், ரவிசங்கர், ஜனா விஜய் மற்றும் நூலின் பதிப்பாசிரியர்கள் கா.கருமலையப்பன், ந.பிரகாசு, இரா.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
***