மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவர்கள், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 26 Oct 2021, 10:50:30 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
விருதுநகர் தெற்கு - வடக்கு மாவட்டங்கள்
அ.தி.மு.க.வை சேர்ந்த
வத்திராயிருப்பு ஒன்றியக்குழுத் தலைவரும் - எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாநில துணைச் செயலாளருமான மா.சிந்துமுருகன் -
எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர் கோகுலம் எம்.தங்கராஜ் -
விருதுநகர் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி சுமதி ராஜசேகர் -
விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர் சி. ஈஸ்வரன் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (25.10.2021) மாலை, விருதுநகர் தெற்கு - வடக்கு ஆகிய மாவட்டங்கள், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வத்திராயிருப்பு ஒன்றியக்குழுத் தலைவரும் - எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளருமான மா.சிந்துமுருகன் - எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் கோகுலம் எம்.தங்கராஜ் - விருதுநகர் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சுமதி ராஜசேகர் - விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர் சி. ஈஸ்வரன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, தென்காசி தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், விருதுநகர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, விருதுநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வி.கே.துரை, ஒன்றியச் செயலாளர்கள் திருவில்லிபுத்தூர் மல்லி ஆறுமுகம், வத்திராயிருப்பு முனியாண்டி - நகரச் செயலாளர்கள் திருத்தங்கல் உதயசூரியன், திருவில்லிபுத்தூர் அய்யாவுபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
***