New - DetailPage - DMK
header_right
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சு.சிவபாலன் தலைமையில், திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம், அதிமுக, பாஜக, பாமக, அமமுக கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 03 Nov 2021, 11:26:31 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருப்பூர் மத்திய மாவட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
மாநிலச் செயலாளரும் - தலைமை நிலைய பரப்புரையாளருமான திருப்பூர் சு.சிவபாலன் தலைமையில்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி முன்னாள் செயலாளர்கள், பகுதி துணைச் செயலாளர்கள், நகரச் செயலாளர், வார்டு செயலாளர்
மற்றும்
அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. - அ.ம.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (2.11.2021) மாலை,  திருப்பூர் மத்திய மாவட்டம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளரும் - தலைமை நிலைய பரப்புரையாளருமான திருப்பூர் சு.சிவபாலன் தலைமையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி முன்னாள் செயலாளர்கள் பி.வடிவேல், என்.சந்தரசேகர், பகுதி துணைச் செயலாளர் எம்.கதிர்வேல்,  நகரச் செயலாளர் எம்.ராஜேஸ்குமார், வார்டு செயலாளர்கள் எஸ்.ஜெயபிரகாஷ், எஸ்.வெங்கடாசலம், வார்டு அவைத்தலைவர் வி.மாரிமுத்து, மாணவர் அணி அமைப்பாளர் ஈ.சிவகுமார், வார்டு பிரதிநிதி தம்பி வி.சிவநாதன் - எம்.முத்துகுமார், கே.பாபு, எஸ்.பி.குபேந்திரபெருமாள், எம்.விஸ்வநாதன், ஏ.ரங்கசாமி, எஸ்.முத்து, ஏ.உதயகுமார், எஸ்.சிவநாதன், எம்.வெங்கடஷ், பிரபு, டி.முருகன், ஆர்.சுப்பிரமணி, ஜீவானந்தம், ஏ.அம்ரிஷ்கான், கே.செல்வம், ஏ.மணிகண்டன், ஆர்.பிரசாந்த், மாதவன், வீரமணி, சம்பத்குமார், எம்.ராம்குமார், சண்முகம், எஸ்.மஞ்சுளாம்பிகா, டி.ஆர்.சிவநாதன், ஆர்.சுந்தரமூர்த்தி, கே.ஆனந்த், முகமது சைபுதின், நாசர்அலி, ஆர்.முருகன், துரைராஜ், முஸ்தபா, எஸ்.கீதாலட்சமி, என்.ராகுல், டி.கனகராஜ், எஸ்.சங்கர், ஜே.குமரேசன், எஸ்.சதாசிவம், ஜெகன், ஜே.காந்திமதி, வி.ஹரிகிருஷ்ணன், பி.ரவி, ஆர்.நித்தியானந்தன், என்.பிரகாஷ், பி.தங்கவேலு, ரெட் ரமேஷ், பி.நாச்சிமுத்து, என்.மணி, ஆர்.ராமச்சந்திரன், பி.சஞ்சய், பி.நவீன், கௌதம், ஜே.ஜெகதீஸ் மற்றும் .தி.மு..வைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிராயபுரம் மண்டல பொறுப்பாளர் கேபிள் விஜய் (எஸ்.விஜயகுமார், அண்ணா மோட்டார் சங்க இணைச் செயலாளர் பி.கருப்புசாமி - பா.ஜ.க.வைச் சேர்ந்த  ராயபுரம் மண்டல விவசாய அணி செயலாளர் பி.சிவராஜ், - பா.ம.க.வைச் சேர்ந்த  மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் சி.வடிவேல்கவுண்டர், மாநகர மாவட்ட முன்னாள் தலைவர் என்எம்.ரங்கநாதன், மாநகர மாவட்ட முன்னாள் அமைப்புச் செயலாளர் கேஎன்.சண்முகம், திருப்பூர் நகர இளைஞர் அணி முன்னாள் செயலாளர் கே.தணசேகர், நகர மாணவர் அணி முன்னாள் தலைவர் வி.நந்தகுமார் அ.ம.மு.க.வைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.ஜி.பிரேம்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் கே.வி.யோஸ்வா தண்டபாணி உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்டோர்  தி.மு.க.வில் இணைந்தனர்.
 
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திருப்பூர் மத்திய  மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், வேலாம்பாளையம் பகுதிச் செயலாளர் கொ.ராமதாஸ், மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் தம்பி வெங்கடாசலம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத், வாலிபாளையம் பகுதி பொருளாளர் ஜெமினிநடராஜ், மாநகர கார் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
***