கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட அதிமுகவை சேர்ந்த குடிமங்கலம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
பதிவு: 03 Nov 2021, 11:27:49 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருப்பூர் தெற்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
குடிமங்கலம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களிலிருந்து
50க்கும் மேற்பட்ட ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் - ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (2.11.2021) மாலை, திருப்பூர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த குடிமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றியக்குழு உறுப்பினருமான எம்.எஸ்.முரளி, குடிமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றியக்குழு துணைத் தலைவருமான பி.சி.புஷ்பராஜ், குடிமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சுகந்தி முரளி, குடிமங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வராஜ், கல்யாணி மணிகண்டன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளரும் - ஊராட்சி மன்றத் தலைவருமான உமாதேவி முருகவேல், குடிமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணி விஸ்வநாதன், ஆத்துக் கிணத்துப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா மாரிமுத்து, குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை தலைவர் பி. முருகவேல், குடிமங்கலம் தெற்கு ஒன்றியத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.அறம் - இணைச் செயலாளர் வி.மணிகண்டன் - துணைச் செயலாளர் என்.முத்துகுமார், ராவணாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.துரைபாபு, குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.மோகன்குமார், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.காளிதாசன், ஒன்றிய தொழிற்சங்க தலைவர் சி.விஸ்வநாதன், டி.செந்தில்குமார், ஆர்.மாரித்து, ஆர்.கோவிந்தசாமி, ஆர்.காளிதாசு - உடுமலைபேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் பி.பாலசுப்பிரமணியம், உறுப்பினர் வைரம்பங்காரு கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிட்டு (எ) ஆர்.கிருஷ்ணசாமி, கே.வினேஷ், தொகுதி மகளிர் அணி அமைப்பாளர் பூங்கொடி பழனிசாமி மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாநில பொறியாளர் அணி செயலாளர் குடிமங்கலம் சி.பிரேம்ராஜா, மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் வி.சிவக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குடிமங்கலம் தெற்கு பொன்.முருகேசன், உடுமலை வடக்கு எஸ்.செல்வராஜ், குடிமங்கலம் வடக்கு சி.கிரி, குடிமங்கலம் மத்திய சி.ஷ்யாம்பிரசாத், மடத்துக்குளம் கே.ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி தெற்கு (தெற்கு) ஜி.கதிர்வேல், மாநில ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கே.எம்.முபாரக்அலி, எஸ்.ராஜமாணிக்கம், கே.கதிரேசன், என்.மகாலிங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட இலக்கிய செயலாளர் தங்கவேல், ஆகியோர் உடனிருந்தனர்.
***