மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கோவை கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.சுரேந்தர் தலைமையில் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 06 Nov 2021, 14:27:14 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கோவை கிழக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
கணியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.சுரேந்தர் தலைமையில்
ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் 1வது வார்டு எஸ்.தேவிசாமிநாதன், 2வது வார்டு மகேஸ்வரி நடராஜன், 3வது வார்டு என்.ஆர்.சுப்பிரமணியம் -தித்திப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் - மாநில விவசாய அணி துணைச் செயலாளருமான புல்லட் பி.கந்தசாமி, கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் என்.விசாலாட்சி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (6.11.2021) காலை, கோவை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க. வைச் சேர்ந்த கணியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.சுரேந்தர் தலைமையில் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் 1வது வார்டு எஸ்.தேவிசாமிநாதன், 2வது வார்டு மகேஸ்வரி நடராஜன், 3வது வார்டு என்.ஆர்.சுப்பிரமணியம் - தித்திபாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் - மாநில விவசாய அணி துணைச் செயலாளருமான புல்லட் பி.கந்தசாமி மற்றும் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் என்.விசாலாட்சி, மற்றும் துணைத் தலைவர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், சூலூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் சன்.இராஜேந்திரன், சூலூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் தளபதி முருகேஷ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.வி.அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
***