மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கரூர் மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நகரச் செயலாளர் எம்.பாண்டியன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள்-சார்பு அணிகளின் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 06 Nov 2021, 14:28:50 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கரூர் மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
கரூர் வடக்கு நகரச் செயலாளர் எம்.பாண்டியன் தலைமையில்
30க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் - சார்பு அணிகளின் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (6.11.2021) காலை, கரூர் மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கரூர் வடக்கு நகரச் செயலாளர் எம்.பாண்டியன் தலைமையில், அ.தி.மு.க.வைச் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பி.ஸ்ரீதர்ராஜா, மாவட்ட இளைஞர் மற்றம் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கே.லோகநாதன், கரூர் வடக்கு நகரத்தைச் சேர்ந்த 11வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.நாச்சிமுத்து, கரூர் வடக்கு நகர மகளிர் அணி பொருளாளரும், 14வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான ரேவதி சிவா, மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் கவுன்சிலருமான அன்னமார் எம்.சக்திவேல், 1வது வார்டு செயலாளர் சி.ஆர்.ரமேஷ், 6வது வார்டு செயலாளர் எஸ்.தர்மலிங்கம், 7வது வார்டு செயலாளர் வி.ராஜேந்திரன், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் வேங்கை என்.ராமச்சந்திரன், நகர அம்மா பேரவை துணைத் தலைவரும் - கரூர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவருமான டி.மணிகண்டன் (எ) செல்வமணி, ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜி.கார்த்திகேயன், நகர சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் இ.அக்பர்பாஷா, நகர மகளிர் அணிச் செயலாளர் பி.நிர்மலா, மாவட்ட பிரதிநிதி கே.கோமதி, நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.ஸ்ரீதர், நகர மாணவர் அணிச் செயலாளர் எஸ். சரண்ராஜ், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.தாமரைக்கனி, நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.சண்முகம், நகர விவசாய அணி துணைச் செயலாளர் எம்.விஸ்வநாதன், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.நவநீதகிருஷ்ணன், நகர மாணவர் அணி இணைச் செயலாளர் ஜி.தினேஷ்குமார், நகர மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.உதயகுமார் (எ) தினேஷ்குமார், நகர மாணவர் அணி பொருளாளர் டி.மோகன், 10வது வார்டு எம்ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம், 14வது வார்டு ஆர்.சிவா, 8வது வார்டு ஜி.பாலசுப்பிரமணியன் மற்றும் தே.மு.தி.க.வைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் எம்.தனபால், மாவட்ட அறங்காவலர் குழு துணைத் தலைவர் வி.எம்.செந்தில் குமார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கரூர் மாவட்டச் செயலாளர் மாண்புமிகு வி.செந்தில்பாலாஜி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கரூர் வடக்கு நகரச் செயலாளர் கரூர் கணேசன், கரூர் மத்திய கிழக்கு நகரச் செயலாளர் கோல்டுஸ்பார்ட் ஆர்.எஸ்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
***