#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
பதிவு: 08 Nov 2021, 10:46:32 மணி
#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.
பொதுமக்கள் 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவியுங்கள்.
2015 பெருவெள்ளம், கொரோனா பேரிடர் என தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், தோள் கொடுக்க உங்கள் உடன்பிறப்பு இருக்கிறேன் எனக் களம் கண்ட கழக உடன்பிறப்புகளே ஒன்றிணைவீர்!
கழக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு உணவு, பாதுகாப்பான உறைவிடம், மருந்துகள் முதலிய அவர்களின் அடிப்படை, அவசரத் தேவைகளை நிறைவேற்றிடுக!