New - DetailPage - DMK
header_right
#NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளார்.

பதிவு: 08 Nov 2021, 10:52:30 மணி

#NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து உங்களிடம் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளேன்.
நேற்று இரவு தொடங்கிய கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றறிந்தவுடன் இன்று காலையே அப்பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிடத் தொடங்கினேன்.
காலை எழும்பூர், பாடி, கொளத்தூர், ஓட்டேரி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை சைதை, கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன்.
பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யவிருக்கும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்வதற்கான உத்தரவுகளையும் வழங்கியுள்ளேன்.
பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் (Human-Made Disaster) மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை என்னால் உணர முடிகிறது.
இது உங்கள் அரசு! இயற்கையால் ஏற்படும் பாதிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயாராக உள்ளது.
1070 உள்ளிட்ட எண்களைத் தொடர்புகொண்டு உங்களது குறைகளைத் தெரிவியுங்கள்.
அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிட தி.மு.கழகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தேவையெனில் தன்னார்வலர்களும் அரசுடன் கைகோத்து உதவிடலாம்.