New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: 15 Nov 2021, 10:45:38 மணி

வழக்கத்தைவிட அதிகமாக பெய்த #NortheastMonsoon காரணமாக தலைநகர் சென்னை மட்டுமல்லாது; தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ளன. ஒருவாரகாலம் தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, மக்களுடன் நின்றேன்.
இன்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். ஏற்கனவே அம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய அமைச்சர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர்களின் ஆய்வு முடிவுகளை அறிந்ததோடு, மண்ணின் மைந்தனாக டெல்டா மாவட்ட மக்களின் துயரை நேரடியாகக் கேட்டறிந்தேன்.
68,000 ஹெக்டேர் வரை பயிர்கள் மூழ்கியுள்ளன. பயிர்களை இயன்ற வரையில் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; இயலாத இடங்களில் மறுநடவு செய்வதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்; கிராமவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உழவர் பெருங்குடி மக்களை நேரில் சந்தித்து உறுதியளித்திருக்கிறேன்.
வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டதுடன் கடலூர் மாவட்டம் மாருதி நகரில் இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்; மயிலாடுதுறை மாவட்டம் கேசவன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டேன்.
உழவர்களின் நலனை என்றும் உயிர்போல் காப்பாற்றி வரும் கழக அரசு வெள்ளத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரைக் களைவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். மாநிலம் முழுதும் வெள்ளத்தடுப்புக்குப் புவியியல் அமைப்புக்கேற்ப வடிகால்களை அமைக்கும் நீண்டகாலத் தீர்வை நோக்கிக் கவனம் செலுத்தப்படும். புதியதொரு மாற்றத்திற்கு உரமிடுவோம்!