மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்டம் அ.தி.மு.க மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 26 Nov 2021, 10:34:01 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
சென்னை தெற்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் தலைமையில்
அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முகேஷ்கண்ணன்,
சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள், ஆலந்தூர் நகரச் செயலாளர்கள் கோபி, பிரபாகரன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள், ஆலந்தூர் நகரச் செயலாளர்கள் கோபி, பிரபாகரன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.11.2021) மாலை, சென்னை தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் தலைமையில் சிறுபான்மையினர் நலப் பிரிவைச் சேர்ந்த வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.செல்வமரிய ஆரோக்கியம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.டி.ஜான்குமார், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.ஆன்ட்ரூஸ், மாவட்ட துணைச் செயலாளர் மதுரவாயல் மேற்கு வி.ஜெபராஜ், தமிழக முஸ்லீம் முகலாய ஜமாஆத் நிறுவனத் தலைவர் ஜெ.என்.சுல்தான், அண்ணா கட்டிட தொழிற் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.சௌத்ரி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முகேஷ்குமார், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள், ஆலந்தூர் தெற்கு நகரச் செயலாளர் கோபி, ஆலந்தூர் வடக்கு நகரச் செயலாளர் பிரபாகரன், வேளச்சேரி பகுதி செயலாளர் கௌதமன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சரும் - சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***