New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை சந்தித்து நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து அனுப்புமாறு வலியுறுத்தினார்.

பதிவு: 27 Nov 2021, 16:34:31 மணி

தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து அனுப்புமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.