முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #WorldDifferentlyAbledDay-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைத்து, விருதுகள் மற்றும் பணி ஆணைகளை வழங்கினார்.
பதிவு: 03 Dec 2021, 13:52:16 மணி
#WorldDifferentlyAbledDay-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைத்து, விருதுகள் மற்றும் பணி ஆணைகளை வழங்கினேன்.
கலைஞர் வழிநின்று எளியோருக்குத் தொண்டாற்றுவதே எனது பணி என்பதில் மகிழ்கிறேன்.
உங்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்!
எண்ணங்களில்தான் குறைபாடுகள் கூடாதே தவிர; உடலளவிலான குறைபாடுகள் குறையே அல்ல!
அதற்குச் சான்றாகவும் பிறர்க்கு ஊக்கமாகவும் பலர் விளங்குகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மேல் நேசம் கொண்டு திட்டங்கள் பல கொண்டு வந்த தலைவர் கலைஞர் அடியொற்றிப் பயணிக்கும் அரசு இது!
சமத்துவத்தை நோக்கிய, எந்த வேற்றுமையும் இல்லாத நமது பயணத்தில் புத்தொளியைப் பாய்ச்சிடுவோம்; மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையான பொதுக் கட்டமைப்புகளை வடிவமைப்போம்; அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி அவர்களின் சுயமரியாதையை உறுதிசெய்வோம்!