மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் நாகை வடக்கு மாவட்டம், பா.ம.க.வை சேர்ந்த மாநில அமைப்பு துணை தலைவர் முத்துகுமார் தலைமையில் பேரூர் செயலாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 15 Dec 2021, 10:43:12 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
நாகை வடக்கு மாவட்டம்,
பா.ம.க.வைச் சேர்ந்த
மாநில அமைப்பு துணைத் தலைவர் எம்.ஆர்.ஜே.முத்துகுமார் தலைமையில்
தரங்கம்பாடி பேரூர்ச் செயலாளர் பி.எம்.ராம்குமார் -
மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் பி.பாலமுருகன்-
விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.துரையரசன் -
ஒன்றிய தலைவர் டி.சிவமணி (பா.ம.க.) - ஒன்றிய தலைவர் (எஸ்.ஐ.எஸ்) ஆர்.செல்வமுத்து - துணைத் தலைவர் எஸ். செந்தில் உள்ளிட்ட
ஒன்றிய தலைவர் டி.சிவமணி (பா.ம.க.) - ஒன்றிய தலைவர் (எஸ்.ஐ.எஸ்) ஆர்.செல்வமுத்து - துணைத் தலைவர் எஸ். செந்தில் உள்ளிட்ட
10க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (14.12.2021) மாலை, நாகை வடக்கு மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், பா.ம.க.வைச் சேர்ந்த மாநில அமைப்பு துணைத் தலைவர் எம்.ஆர்.ஜே.முத்துகுமார், தலைமையில், பா.ம.க.வைச் சேர்ந்த தரங்கம்பாடி பேரூர்ச் செயலாளர் பி.எம்.ராம்குமார் - மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் பி.பாலமுருகன் - விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.துரையரசன் - ஒன்றிய தலைவர் (எஸ்ஐஎஸ்) ஆர்.செல்வமுத்து - ஒன்றிய தலைவர் (பா.ம.க) டி.சிவமணி - துணைத் தலைவர் எஸ்.செந்தில் - கிளைச் செயலாளர் எம்.சதீஷ் - நகர தொழிற்சங்க தலைவர் எஸ்.மணிகண்டன் - நகர இளைஞர் அணி ப.மணிகண்டன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது நாகை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நிவேதா முருகன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றியச் செயலாளர்கள் அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
***