நீராரும் கடலுடுத்த எனும் மாநிலப் பாடல் பாடப்படுகையில், மாற்றுத்திறனாளிகள் தவிர, இனி மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவு: 17 Dec 2021, 14:44:00 மணி
தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தரனார் அவர்கள் இயற்றிய பாயிரப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்துப் போற்றினார் தலைவர் கலைஞர். அதற்கு மேலும் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் வகையில் இனி அப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. நீராரும் கடலுடுத்த எனும் மாநிலப் பாடல் பாடப்படுகையில், மாற்றுத்திறனாளிகள் தவிர, இனி மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.