New - DetailPage - DMK
header_right
“தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்” மூன்று பாகங்கள் நூல் வெளியீடு நிகழ்ச்சி

பதிவு: 20 Dec 2021, 10:37:52 மணி

“தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்” மூன்று பாகங்கள் நூல் வெளியீடு நிகழ்ச்சி - 1989ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை வணங்கி ஆற்றிய எனது கன்னிப்பேச்சு தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றியது வரையிலான சட்டமன்ற உரைகள் அடங்கிய 3 பாகங்கள் கொண்ட நூல் தொகுப்பினை, கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் வெளியிட; கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் பெற்றுக்கொண்டார். 

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் எனது சட்டமன்றப் பணிகளை நான் அமைத்துக் கொண்டேன். மக்களின் குரலான சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகள், தரம்குறையாத் தங்கம்நிகர் கருத்துகளுடன் அமைய வேண்டும் என்பதை என் விருப்பமாக இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.